Tamil Songs Lyrics, Tamil Lyrics In Tamil, Latest Tamil Songs,தமிழ் பாடல் வரிகள்: ~ Rahul Nambiyar
Showing posts with label ~ Rahul Nambiyar. Show all posts
Showing posts with label ~ Rahul Nambiyar. Show all posts

Sunday, November 10, 2013

yaarukkum sollaama lyrics-all in all azhagu raja tamil song lyrics / யாருக்கும் சொல்லாம

Movie Name:All in all azhagu raja
Song Name:Yaarukkum sollaama
Singer:Rahul Nambiyar
Music Director:Thaman.S
Lyricist:Na.Muthukumar
Cast:Kajal Agarwal,Karthi
Year of release:2013

Lyrics:-

En chellam en chellam
Yaarukkum sollaama un nenjukkulla edam pudichen
Unnaala thannaala
Kaaranam illaama un kannukkulla sikkith thavichen
Munnala pinnala en manasukkulla
Thangam chellam vellam
Konjam enna kavuthu putta mella saaichi putta
Thangam chellam vellam
Aiyo enna thavikka vitta nenja thudikka vitta
Yaaro nee yaaro un pera sollidath thaane
Kitta thatta konnu putta

Hey thottu thottu thottu  un nenja thottu thottu
Intha kaadhalum vanthu unnai otti otti kondatha
Vittu vittu vittu oru kaaichal vanthu vittu
Intha kaadhalin veppam unnai suttu suttu sendratha

Yaarukkum sollaama un nenjukkulla edam pudichen
Unnaala thannaala

Un azhaga un azhaga
Un azhaga paathu manasa paathu
Mayangip ponen naane
Adi kizhakka paathu merka paathu
Thaniya ninnene
Un azhaga paathu manasa paathu
Mayangip ponen naane
Alai illaa kadala pola asaiyaama ninnene
Kara mela unna paarthu dhesa maari vanthene
Enakkulle enna thedi pudhusaaga piranthene

Yaaro nee yaaro un paera sollida thaane
Kitta thatta konnu putta

Adi valaiyapatti thavalu satham
Manasukkulla ketten
Adha anga thatti inga thatti
Aattam podaathe
Adi valaliyapatti thavalu satham
Manasukkulla keten
Mazha penja tharaiya pola pudhu vaasam thanthaaye
Puriyaatha vaasam intha pen vaasam endraaye
Thdai illaa minsaaram pol thinanthorum vanthaaye

Yaaro nee yaaro un pera sollida thaane
Kitta thatta konnu putta
En chellam en chellam

யாருக்கும் சொல்லாம உன் நெஞ்சுக்குள்ள எடம் புடிச்சேன்
உன்னால தன்னால
காரணம் இல்லாம உன் கண்ணுக்குள்ள சிக்கித் தவிச்சேன்
முன்னால பின்னால என் மனசுக்குள்ள
தங்கம் செல்லம் வெல்லம்
கொஞ்சம் என்ன கவுத்து புட்ட மெல்ல சைசி புட்ட
தங்கம் செல்லம் வெள்ளம்
ஐயோ என்ன தவிக்க விட்ட நெஞ்ச துடிக்க விட்ட
யாரோ நீ யாரோ உன் பெற சொல்லிடத் தானே
கிட்ட தட்ட கொன்னுப்புட்ட

ஹே தொட்டு தொட்டு தொட்டு உன் நெஞ்ச தொட்டு தொட்டு
இந்த காதலும் வந்து உன்னை ஒட்டி ஒட்டிக் கொண்டதா
விட்டு விட்டு விட்டு ஒரு காய்ச்சல் வந்து விட்டு
இந்த காதலின் வெப்பம் உன்னை சுட்டு சுட்டுச் சென்றதா

யாருக்கும் சொல்லாம உன் நெஞ்சுக்குள்ள எடம் புடிச்சேன்
உன்னால தன்னால

உன் அழக உன் அழக
உன் அழக பாத்து மனச பாத்து
மயங்கிப் போனேன் நானே
அடி கிழக்க பாத்து மேற்க பாத்து
தனியா நின்னேனே
உன் அழக பாத்து மனச பாத்து
மயங்கிப் போனேன் நானே
அலை இல்லா கடலப் போல அசையாம நின்னேனே
கர மேல உன்ன பார்த்து தெச மாறி வந்தேனே
எனக்குள்ளே என்ன தேடி புதுசாகப் பிறந்தேனே

யாரோ நீ யாரோ உன் பேர சொல்லிடத் தானே
கிட்ட தட்ட கொன்னுப்புட்ட

அடி வலையாபட்டி தவலு சத்தம்
மனசுக்குள்ள கேட்டேன்
அத அங்க தட்டி இங்க தட்டி
ஆட்டம் போடாதே
அடி வலையாபட்டித் தவலு சத்தம்
மனசுக்குள்ள கேட்டேன்
மழை பெஞ்ச தரையைப் போல புது வாசம் தந்தாயே
புரியாத வாசம் இந்த பெண் வாசம் என்றாயே
தடை இல்லா மின்சாரம் போல் தினந்தோறும் வந்தாயே

யாரோ நீ யாரோ உன் பேரச் சொல்லிடத் தானே
கிட்ட தட்ட கொன்னுப்புட்ட
என் செல்லம் என் செல்லம் 

http://www.youtube.com/watch?v=8NgSEDsTN-M


Tuesday, August 27, 2013

nadhi vellam mele lyrics-thanga meengal tamil song lyrics / நதி வெள்ளம் மேலே

Movie Name:Thanga meengal
Song Name:Nadhi vellam
Singer:Rahul Nambiyar
Music Director:Yuvan Shankar Raja
Lyricist:Na.Muthukumar
Cast:Ram,Shelly
Year of release:2013

Lyrics:-

Appaakkalaip piriyaa magalgal adhirshtasaaligal
Magalgalaip piriyaa appaakkal baakkiyavaangal
Aanaal appadi ellaam thanthu vida
Vaazhkai ondrum thozhan illai

Nadhi vellam mele en meene meene
Nee neendhiya ,
Pon ninaivugal nenjil nizhalaadum
Mun andhi nilavil en maane maane
Nee odiya ,
Mensuvadugal meendum unaik ketkum

Adi en kannin iru karuvizhigal
Un mugathaith theduthadi
Kanneer thuligal kaatchiyai maraikkuthadi
En kaattil oru mazhai vanthathu
Magarantha eerangal kaayum munne
Idiminnal vizhunthu kaade erinthathadi

Alainthidum megam adhaip pola
Indha vaazhkkaiye
Kaatrin vazhiyil pogindrom
Kalainthidum kolam endra podhilum
Adhikalaiyil
Vaasalil vannam vidhaikkindrom

Uyire unnaip pirinthen
Udane naanum irandhen
Udal naan angu vaazhum
Nee thaane ... endhan uyire

Malar ondru vizhunthaal
Adhai yendha palar oduvaar
Ilaigal vizhunthaal sarugaagum
Variyavan vaazhkai
Ilai pola endra podhilum
Sarugugal oru naal uramaagum

Uyire unnaip pirinthen
Udane naanum irandhen
Udal naan angu vaazhum
Nee thaane ... endhan uyire

அப்பாக்களை பிரியா மகள்கள் அதிஷ்டசாலிகள்
மகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள்
ஆனால் அப்படி எல்லாம் தந்து விட
வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை

நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்

அடி என் கண்ணின் இரு கருவிழிகள்
உன் முகத்தைத் தேடுதடி
கண்ணீர் துளிகள் காட்சியை மறைக்குதடி
என் காட்டில் ஒரு மழை வந்ததும்
மகரந்த ஈரங்கள் காயும் முன்னே
இடி மின்னல் விழுந்து காடே எறிந்ததடி

நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்

அலைந்திடும் மேகம் அதைப் போல
இந்த வாழ்க்கையே
காற்றின் வழியில் போகின்றோம்
கலைந்திடும் கோலம் என்ற போதிலும்
அதிகாலையில்
வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்
உயிரே உன்னைப் பிரிந்தேன்
உடனே நானும் இறந்தேன்
உடல் தான் அங்கு வாழும்
நீதானே ... எந்தன் உயிரே

நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்

மலர் ஒன்று வீழ்ந்தால் அதை ஏந்தப் பலர் ஓடுவார்
இலைகள் வீழ்ந்தால் சருகாகும்
வறியவன் வாழ்க்கை இலை போல என்ற போதிலும்
சருகுகள் ஒரு நாள் உரமாகும்
உயிரே உன்னைப் பிரிந்தேன்
உடனே நானும் இறந்தேன்
உடல் தான் அங்கு வாழும்
நீதானே ... எந்தன் உயிரே

நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்

http://www.youtube.com/watch?v=QUn_WzLABhc



Tuesday, July 26, 2011

idhayam pesuthe lyrics-pesu tamil song lyrics/இதயம் பேசுதே

Lyrics of tamil song ithayam pesuthe from the movie Pesu :-
 
Ithayam pesuthe
Edhaiyo ketkuthe
Intha vaazhvai vazhath thonuthe
Puriyaatha mozhigal pesidum
Dhesathil naanum nirkkiren
Tamilil paadal ondrai isaikkiraai
Pani kottum neenda saalaiyil
Vegu thooram nadakka nirkkiren
Thaniyaaga illai unnudan

Naano tholainthu ponen
Netru varaiyile man mele
Unnil ennaik kanden
Ottrai nodiyile unnaale
Enakkulle neeyum vaazhum pozhuthu
Sogangal illai neeyum ezhuthu
Unakke thaayaai maarinen
Kaalathin kadaisi padiyinil
Kan moodi naanum nadakkiren
Thedi vandhu neeye thaanginaai

Thevai attra sumaiyaai
Naanum mannile kidanthen
Ennai sumakkum uyiraai
Unnaik kandu thaan ezhunthen
Uyir sumai romba baaram endru
Ithu varai udal sonnathillai
Nee thaan endhan uyiradaa
Puriyaamal mudiya pogira
Kadhai ondrin kadaisi vaarthaiyil
Odi vanthu adhanai thodargiraai

Ithayam pesuthe
Unaiye ketkuthe
Indha vaazhvai vaazhach cholluthe

Aah aah aah aah.....
 
பேசு  திரைபடத்தில் இருந்து இதயம் பேசுதே பாடல் வரிகள் : -

இதயம் பேசுதே
எதையோ கேட்குதே
இந்த வாழ்வை வாழத் தோணுதே
புரியாத மொழிகள் பேசிடும்
தேசத்தில் நானும் நிற்கிறேன்
தமிழில் பாடல் ஒன்றை இசைக்கிறாய்
பனி கொட்டும் நீண்ட சாலையில்
வெகு தூரம் நடக்க நிற்கிறேன்
தனியாக இல்லை உன்னுடன்

நானோ தொலைந்து போனேன்
நேற்று வரையிலே மண் மேலே
உன்னில் என்னைக் கண்டேன்
ஒற்றை நொடியிலே உன்னாலே
எனக்குள்ளே நீயும் வாழும் பொழுது
சோகங்கள் இல்லை நீயும் எழுது
உனக்கே தாயாய் மாறினேன்
காலத்தின் கடைசி படியினில்
கண் மூடி நானும் நடக்கிறேன்
தேடி வந்து நீயே தாங்கினாய்

தேவை அற்ற சுமையாய்
நானும் மண்ணிலே கிடந்தேன்
உன்னை சுமக்கும் உயிராய்
உன்னைக் கண்டு தான் எழுந்தேன்
உயிர் சுமை ரொம்ப பாரம் என்று
இது வரை உடல் சொன்னதில்லை
நீ தான் எந்தன் உயிரடா
புரியாமல் முடிய போகிற
கதை ஒன்றின் கடைசி வார்த்தையில்
ஓடி வந்து அதனை தொடர்கிறாய்

இதயம் பேசுதே
உனையே கேட்குதே
இந்த வாழ்வை வாழத் தோணுதே

ஆ ஆ ஆ ஆ .......

About song :-

Movie Name:Pesu
Singers:Rahul nambiyar,Rita
Music Director:Yuvan Shankar Raja
Year of release:2011
Cast:Vignesh,Vibha


http://www.youtube.com/watch?v=uSw1yLbyXDg

Tuesday, May 11, 2010

para para kili lyrics-rettaisuzhi tamil song lyrics/பற பற கிளி

Rettaisuzhi lyrics
Movie Name:Rettaisuzhi
Song Name:Para para kili
Singers:Rahul nambiyar,Deepa marium
Music Director:Karthik raja
Lyricist:Pazhani bharathi
_______________________________________

Lyrics:;

Para para kili para para kili
Madiyinil oru poo podu
Pazham parikkanum
Parakkanum naan unnodu

Un siragile dheemthanana dheenthanana
Vaanile aadidavaa megamaai midhanthidava
Un uravile aariraaro paadidava
Aasaiyaai pazhagidava

Mazhayadikkuthu veyiladikkuthu
Nadappathu yaar kalyaanam
Manalveliyila manalveliyila
Kichchu kichchu pooththaam paalam

Vaanavil valaivu
Vaasanai kanavu
Valaruthu nilavu
Ilaiya uravu malara malara

Para para kili...

Vizhiyodum manathodum yekkam
Thol meethum madi meethum thookkam
Kai veesi kathai pesum kulaththoram
Kannaadi pazham pol mazhai thoorum

Un ninaivile naan
Valarkkum kanavo azhagu
Manam virumbum ponvandai
Karam pidithu thanthaaye
Siragu virinthu uyir silirkkirathe

Para para kili...

Marapaachi kalyaanam paaru
Oru dumdum oru peepee oodhu
Valaiyodu kolusodu thoadu
Thaai maaman seeraaga podu

En manathile nee
Vasikkum azhago azhagu
Enai maranthu viaiyaada
Uyir kalandhu uravaada
Ninaikkum podhu manam inikkirathe

Para para kili....

______________________________________

பற பற கிளி பற பற கிளி
மடியினில் ஒரு பூ போடு
பழம் பறிக்கனும்

பறக்கணும்  நான் உன்னோடு

உன் சிறகிலே தீம்தனனா தீம்தனனா
வானிலே ஆடிடவா மேகமாய் மிதந்திடவா
உன் உறவிலே ஆரிரரோ பாடிடவா
ஆசையாய் பழகிடவா

மழையடிக்குது வெயிலடிக்குது
நடப்பது யார் கல்யாணம்
மணல்வெளியில மணல்வெளியில
கிச்சுகிச்சுப் பூத்தாம்பாளம்

வானவில் வளைவு
வாசனைக் கனவு
வளருது நிலவு
இளைய உறவு மலர மலர


பற பற கிளி...


விழியோடும் மனதோடும் ஏக்கம்
தோள் மீதும் மடி மீதும் தூக்கம்
கை வீசி கதை பேசும் குளத்தோரம்
கண்ணாடி பழம் போல் மழை தூறும்

உன் நினைவிலே நான்
வளர்க்கும் கனவோ அழகு
மனம் விரும்பும் பொன்வண்டை
கரம் பிடித்து தந்தாயே
சிறகு விரிந்து உயிர் சிலிர்க்கிறதே


பற பற கிளி...


மரப்பாச்சி கல்யாணம் பாரு
ஒரு டும்டும் ஒரு பீப்பீ ஊது
வளையோடு கொலுசோடு தோடு
தாய்மாமன் சீராகப் போடு

என் மனதிலே நீ
வசிக்கும் அழகோ அழகு
எனை மறந்து விளையாட
உயிர் கலந்து உறவாட
நினைக்கும் போது மனம் இனிக்கிறதே


பற பற கிளி....


_______________________________________________


http://www.youtube.com/watch?v=IQDLWroZcRI

Monday, May 10, 2010

thamizhan veera thamizhan lyrics-sura tamil song lyrics/ தமிழன் வீர தமிழன்




Sura lyrics
Movie Name:Sura
Song Name:Thamizhan veera thamizhan
Singers:Rahul Nambiyar
Music Director:Mani Sharma

_______________________________________

Thamizhan veera thamizhan 
Thalamai thaangum oruvan
Thuyaram nerntha idathil
Thoazhan thol koduppaan
Analai pola iruppaan
Adimai vilangai udaippaan
Than nizhalai kooda mithithaal
Netri kan thirappaan

Thamizhan veera thamizhan
Thalamai thaangum oruvan
Thuyaram nerntha idathil
Thozhan thol koduppaan

Charanam 1

Ivanai theenda ninaithaal
Irumbuk kaiyaal azhipaan
Irulai pokka ivane vilakkai pol varuvaan
Dharmam kaakka endrum
Thannai thaane tharuvaan
Adharmam azhikka ivane
Aayudham aagiduvaan

Thamizhan veera thamizhan
Thalamai thaangum oruvan
Thuyaram nerntha idathil
Thozhan thol koduppaan

Charanam 2

Erimalai pole ezhuvaan
Edhiriyum ivanai thozhuvaan
Puyalai pola vanthu
Porkkalam vendriduvaan
Thaniye nindru jeyippaan
Tharaniyil endrum nilaippaan
Ivanaip pola oruvan inimel yaar varuvaar

Thamizhan veera thamizhan
Thalamai thaangum oruvan
Thuyaram nerntha idathil
Thozhan thol koduppaan
Analai pola iruppaan
Adimai vilangai udaippaan
Than nizhalai kooda mithiththaal
Netri kan thirappaan

________________________________________
பல்லவி:

தமிழன் வீர தமிழன்
தலைமை தாங்கும் ஒருவன்
துயரம் நேர்ந்த இடத்தில்
தோழன் தோள் கொடுப்பான்
அனலை போல இருப்பான்
அடிமை விலங்கை உடைப்பான்
தன் நிழலை கூட மிதித்தால்
நெற்றி கண் திறப்பான்

தமிழன் வீர தமிழன்
தலைமை தாங்கும் ஒருவன்
துயரம் நேர்ந்த இடத்தில்
தோழன் தோள் கொடுப்பான்

சரணம் ௧

இவனை தீண்ட நினைத்தால்
இரும்புக் கையால் அழிப்பான்
இருளை போக்க இவனே
விளக்கை போல் வருவான்
தர்மம் காக்க என்றும்
தன்னை தானே தருவான்
அதர்மம் அழிக்க இவனே
ஆயுதம் ஆகிடுவான்

தமிழன் வீர தமிழன்
தலைமை தாங்கும் ஒருவன்
துயரம் நேர்ந்த இடத்தில்
தோழன் தோள் கொடுப்பான்

சரணம் ௨

எரிமலை போலே எழுவான்
எதிரியும் இவனை தொழுவான்
புயலை போல வந்து
போர்க்களம் வென்றிடுவான்
தனியே நின்று ஜெயிப்பான்
தரணியில் என்றும் நிலைப்பான்
இவனைப் போல ஒருவன் இனிமேல் யார் வருவார்

தமிழன் வீர தமிழன்
தலைமை தாங்கும் ஒருவன்
துயரம் நேர்ந்த இடத்தில்
தோழன் தோள் கொடுப்பான்
அனலை போல இருப்பான்
அடிமை விலங்கை உடைப்பான்
தன் நிழலை கூட மிதித்தால்
நெற்றி கண் திறப்பான்

__________________________________________




http://www.youtube.com/watch?v=p5wt5RbRLQE