Tamil Songs Lyrics, Tamil Lyrics In Tamil, Latest Tamil Songs,தமிழ் பாடல் வரிகள்: ღღ Bhagyaraj songs
Showing posts with label ღღ Bhagyaraj songs. Show all posts
Showing posts with label ღღ Bhagyaraj songs. Show all posts

Thursday, October 31, 2013

vaan megangale lyrics-pudhiya vaarpugal tamil song lyrics / வான் மேகங்களே

Movie Name:Pudhiya vaarpugal
Song Name:Vaan megangale
Singer:Malaysia Vasudevan,S.Janaki
Music Director:Ilaiyaraja
Lyricist:Kannadasan
Cast:Bhagyaraj,Rati agnihotri
Year of release:1979

Lyrics:-

Vaan megangale vaazhthugal paadungal
Naan indru kandukonden raamanai
Vaan megangale
Vaan megangale vaazhthugal paadungal
Naan indru kandukonden seedhaiyai
Vaan megangale

Paalile pazham vizhunthu thaenile nanainthathamma (2)
Poovile maalai katti sooduven kanna
Koo kukkukoo
Kuyil paadi vaazhthum neram kanden

Vaan megangale ....

Thendral aasai kondu thogaiyaai kalainthathamma (2)
Devadhai vannam konda poovai nee kanne
Vaa ammammaa
Nenjil deepam yetrum dhegam kanden

Vaan megangale ....

Palliyil paadam solli ketka naan aasai konden
Paavaiyin kovil mani osaiyai nee kanne
Thaa thannanna
Sangin osai ketkum neram endro

Vaan megangale ....

வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
வான் மேகங்களே

வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்
நான் இன்றுக் கண்டு கொண்டேன் சீதையை
வான மேகங்களே

பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா (2)
பூவிலே மாலைக் கட்டி சூடுவேன் கண்ணா
கூ குக்குகூ
குயில் பாடி வாழ்த்தும்  நேரம் கண்டேன்

வான் மேகங்களே ...

தென்றல் ஆசைக் கொண்டு தொகையை கலைந்ததம்மா (2)
தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே
வா அம்மம்மா
நெஞ்சில் தீபம் ஏற்றும் தேகம் கண்டேன்

வான் மேகங்களே ....

பள்ளியில் பாடம் சொல்லி கேட்க நான் ஆசைக் கொண்டேன்
பாவையின் கோவில் மணி ஓசையை நீ கண்ணே
தா தன்னன்னா
சங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ ?

வான் மேகங்களே ....

http://www.youtube.com/watch?v=Q8MPSbmZjy4



Thursday, September 26, 2013

idhayam poguthe lyrics-pudhiya varpugal tamil song lyrics / இதயம் போகுதே

Movie Name:Pudhiya varpugal
Song Name:Idhayam poguthe
Singer:Jency
Music Director:Ilaiyaraja
Lyricist:Panju arunachalam
Cast:Bharathi raja,Bhagyaraj,Rathi agni hotri
Year of release:1979

Lyrics:-

Idhayam poguthe
Idhayam poguthe enaiye pirinthe
Kaadhal ilangaattru paadigindra paattu
Kaadhal ilangaattru paadugindra paattu ketkaatho
Idhayam poguthe

Maniyosai kettu magizhvodu nettru
Kaigal thattiya kaalai sendrathenge
Arumbana en kaadhal malaraagumo
Malaragi vaazhvil manam veesumo

Idhayam poguthe enaiye pirinthe

Suduneeril vizhunthu thudikkindra meen pol
Thogai nenjinil sogam ponguthamma
Kuyil koova vasanthangal uruvaagumo
Veyil theendum poovil pani neengumo

Idhayam poguthe enaiye pirinthe

Mazhaich saaral oram mayil aadum neram
Paadal sollavum dhevan illai yamma
Nizhal pola unnodu naan sangamam
Thara vendum vaazhvil nee kungumam

Idhayam poguthe enaiye pirinthe
Kaadhal ilangaattru paadugindra paattu
Kaadhal ilangaatru paadugindra paattu ketkaadho
Idhayam poguthe


இதயம் போகுதே
இதயம் போகுதே எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ
இதயம் போகுதே

மணியோசை கேட்டு மகிழ்வோடு நேற்று
கைகள் தட்டிய காலை சென்றதெங்கே
அரும்பான என் காதல் மலராகுமோ
மலராகி வாழ்வில் மணம் வீசுமோ

இதயம் போகுதே எனையே பிரிந்தே

சுடுநீரில் விழுந்து துடிக்கின்ற மீன்போல்
தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா
குயில் கூவ வசந்தங்கள் உருவாகுமோ
வெயில் தீண்டும் பூவில் பனி நீங்குமோ

இதயம் போகுதே எனையே பிரிந்தே

மலைச்சாரல் ஓரம் மயிலாடும் நேரம்
பாடல் சொல்லவும் தேவன் இல்லையம்மா
நிழல் போல உன்னோடு நான் சங்கமம்
தரவேண்டும் வாழ்வில் நீ குங்குமம்

இதயம் போகுதே எனையே பிரிந்து
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ
இதயம் போகுதே

http://www.youtube.com/watch?v=lzRC-hYo3EE



Thursday, July 25, 2013

sengamalam sirikkuthu lyrics-thaavani kanavugal tamil song lyrics / செங்கமலம் சிரிக்குது

Movie Name:Thavanik kanavugal
Song Name:Sengamalam sirikkuthu
Singers:S.P.Balasubramanium,S.Janaki
Music Director:Ilaiyaraja

Lyrics:-

Sengamalam sirikkuthu sangamatha ninaikudhu
Ku ku kukuku ku ku ena koovum kuyil
Chinna chinna sandhathil andhi por nadathum

Sengamalam sirikkudhu sangamatha ninaikkudhu
Ku ku ku ena koovum kuyil
Chinna chinna sandhathil andhi por nadathum

Sengamalam sirikkuthu sangamatha ninaikudhu

Mutham idum maalai velai
Moodu vizhaa naadagamo
Nitham idhazh thedum nerum
Naanam enum noi varumo
Poomaalai soodaathu paai thedak koodaathu
Ellai thanai thaandaathu
Pillai enath thalaattu
Manjal tharum naal kooru
Vanjam illai thaal podu
Kaaman yeval enai kaaval meera thoonduthe

Sengamalam sirikkuthu sangamathai ninaikkuthu
Sengamalam sirikkuthu sangamathai ninaikkuthu

Mangai ival thegam nogum
Moganamaaith thaalamidu
Gangai nadhi paayum neram
Kaadhil oru sedhi kodu
Naaldhorum raakkaalam
Yethinge boopaalam
Inbak kadhai kaanaadhu kangal imai moodaathu
Unnaik karaich serkaathu endhan alai oyaathu
Seval adhu koovum varai naanam oivu kaanume

Sengamalam sirikkuthu sangamathai ninaikkuthu
Sengamalam sirikkuthu sangamathai ninaikkuthu
Kukkoo ena koovum kuyil chinna chinna santhathil
Andhip por nadathum

Sengamalam sirikkuthu sangamathai ninaikkuthu
Sengamalam sirikkuthu sangamathai ninaikkuthu


செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது

செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
கூகூ.. குக்குகூகூ
கூகூ என கூவும் குயில் சின்ன சின்ன சந்தத்தில்
அந்தி போர் நடத்தும்

செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
கூகூ என கூவும் குயில் சின்ன சின்ன சந்தத்தில்
அந்தி போர் நடத்தும்

செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது

முத்தம் இடும் மாலை வேளை
மூடு விழா நாடகமோ
நித்தம் இதழ் தேடும் நேரம்
நாணம் எனும் நோய் வருமோ
பூமாலை சூடாது பாய் தேட கூடாது
எல்லை தனை தாண்டாது
பிள்லை என தாலாட்டு
மஞ்சள் தரும் நாள் கூறு
வஞ்சம் இல்லை தாள் போடு
காமன் கணை ஏவல் எனை காவல் மீற தூண்டுதே

செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது

மங்கை இவள் தேகம் நோகும்
மோகனமாய் தாளமிடு
கங்கை நதி பாயும் நேரம்
காதில் ஒரு சேதி கொடு
நாள்தோறும் ராக்காலம்
ஏதிங்கே பூபாளம்
இன்ப கதை காணாது கண்கள் இமை மூடாது
உன்னை கரை சேர்க்காது எந்தன் அலை ஓயாது
சேவல் அது கூவும் வரை நாணம் ஓய்வு காணுமே

செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
கூகூ என கூவும் குயில் சின்ன சின்ன சந்தத்தில்
அந்தி போர் நடத்தும்

செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது

 http://www.youtube.com/watch?v=LX1AlKdr9Eg


yaarum illaatha lyrics-gnyaana pazham tamil song lyrics / யாரும் இல்லாத தீவொன்று

Movie Name:Gnyana pazham
Song Name:Yaarum illatha
Singers:Unni krishnan,Sujatha

Lyrics:-

Yaarum illaatha theevondru vendum vendum
Adhil ennodu nee mattum vendum (2)
Aaagaaya venmegam paayaga vendum
Paai meethu vinmeengal poovvaaga vendum
Aadhaamum yevaalum naamaaga urumaari
Agilathai pudhuppikka vendum vendum

En vizhiyil bimbam endrum neeyaaga vendum
Un mozhigal ondre endrum en kaadhil vendum
Unnudaiya peyar solli en idhayam thudikkindra
Varam ondru pera vendume
En naadi narambengum un jeevan vandhu
Swaram meettum sugam vendume
Nodi kooda nillaadha kadigara mullaaga
Manam unnai valam vandhu uyirodu uyir sera ...

Yaarum illaadha ...

Kaaviriyil vandhu gangai kai serkka vendum
Naamum adhil sendru kaadhal neeraada vendum
Eezhathil por ointhu then mulai poo poothu
Nee sooda thara vendume
Thee eriyum kashmeeril thendral varum thirunaali
Oorkolam vara vendume
Vedikundu poochendu en maarum naal ondril
Madi meethu thalai saaynthu sugamaaga thuyil meva

Yaarum illaatha ....

யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்
அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும் (2)
ஆகாய வெண்மேகம் பாயாக வேண்டும்
பாய் மீது விண்மீன்கள் பூவாக வேண்டும்
ஆதாமும் ஏவாளும் நாமாக உருமாறி
அகிலத்தைப் புதுப்பிக்க வேண்டும் வேண்டும்


என் விழியில் பிம்பம் என்றும் நீயாக வேண்டும்
உன் மொழிகள் ஒன்றே என்றும் என் காதில் வேண்டும்
உன்னுடைய பெயர் சொல்லி என் இதயம் துடிக்கின்ற
வரம் ஒன்று பெற வேண்டுமே
என் நாடி நரம்பெங்கும் உன் ஜீவன் குடி வந்து
ஸ்வரம் மீட்டும் சுகம் வேண்டுமே
நொடி கூட நில்லாத கடிகார முள்ளாக
மனம் உன்னை வலம் வந்து உயிரோடு உயிர் சேர..

யாரும்...

காவிரியில் வந்து கங்கை கை சேர்க்க வேண்டும்
நாமும் அதில் சென்று காதல் நீராட வேண்டும்
ஈழத்தில் போர் ஓய்ந்து தேன் முல்லை பூ பூத்து
நீ சூட தர வேண்டுமே
தீ எறியும் காஷ்மீரில் தென்றல் வரும் திருநாளில்
ஊர்கோலம் வரவேண்டுமே
வெடிகுண்டு பூச்செண்டு என மாறும் நாள் ஒன்றில்
மடி மீது தலை சாய்த்து சுகமாக துயில் மேவ..

யாரும்...

http://www.youtube.com/watch?v=hpZiyyiiVgU


Thursday, July 21, 2011

boopaalam isaikkum lyrics-thooral ninnu pochu tamil song lyrics/ பூபாளம் இசைக்கும்

Lyrics of Boopaalam isaikkum from the movie Thooral ninnup pochi :-

Boopaalam isaikkum poomagal oorvalam
Boopaalam isaikkum poomagal oorvalam
Iru manam sugam perum vaazhnaale
Boopaalam isaikkum poo magal oorvalam
Iru manam sugam perum vaazhnaale
Boopaalam isaikkum poo magal oorvalam

Maalai andhi maalai intha velai mogame
Maalai andhi maalai intha velai mogame
Naayagan jaadai noothaname
Naaname pennin seethaname
Megamazhai neeraada
Thogai mayil vaaraatho
Thithikkum idhazh muthangal adhu
Nananana....

Boopaalam isaikkum poo magal oorvalam
Iru manam sugam perum vaazhnaale
Boopaalam isaikkum poomagal oorvalam

Poovai endhan sevai undhan sevai allavaa
Poovai endhan sevai undhan sevai allavaa
Manmadhan kovil thoraname
Maargazhith thingal poo mugame
Naalum ini sangeetham
Paadum ival poonthegam
Ammamma andha sorgathil sugam
Nanana....

Boopaalam isaikkum poo magal oorvalam
Iru manam sugam perum vaazhnaale
Boopaalam isaikkum poo magal oorvalam

தூறல் நின்னுப் போச்சி படத்தில் இருந்து பூபாளம் இசைக்கும் பாடல் வரிகள் :-

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே
நாணமே பெண்ணின் சீதனமே
மேகமழை நீராட...தோகை மயில் வாராதோ
தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது
னன னன னன னனனா

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
மன்மதன் கோயில் தோரணமே
மார்கழி திங்கள் பூ முகமே
நாளும் இனி சங்கீதம்...பாடும் இவள் பூந்தேகம்
அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்
னன னன னன னனனா

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

About song:-

Movie Name:Thooral ninnu pochu
Singers:Uma ramanan,K.J.Yesudhas
Music Director:Ilaiyaraja
Year of release:1982
Lyricist:Muthulingam



http://www.youtube.com/watch?v=N0mjFqtI2QU&feature=related

Friday, March 26, 2010

vella manam ulla machaan lyrics-chinna veedu tamil song lyrics/ வெள்ள மனம் உள்ள மச்சான்



Movie Name:Chinna veedu
Song Name;Vella manam
Singers;Malysia Vasudhevan,Sunandha
Music Director:Ilaiyaraja

Lyrics:

Vella manam ulla machaan
Vizhiyoram eeram enna
Pakkathile naan irunthum
Dhukkathile nee irunthaal
Karai serum naal eppo

Vella manam ulla machaan
Vizhiyoram eeram enna
Kalla manam mullu thachi
Kanneeril moozhguthadi
Vetkathile naan azhuthen
Dhukkathie nee azhutha
Karai serum kaalam eppo
Kalla manam mullu thachi
Kanneeril moozhguthadi

Charnam 1

Sengarumbai naan maranthu
Veli mullai yen kadichen
Poovukkullum naagam undu
Saamikkum thaan veedu rendu
Kallaiyum paalaa nee ninaicha
Mullaiyum poovaa nee midicha
Ponathellaam pogatumnga
Yaarum inge raaman illai

Vellai manam..

Charnam 2

Kooduvittu ponakili
Jodi kitte sernthathamma
Jodi vanthu serntha kili
Kodi sugam kaanuthamma
Sippiya pole naan irunthu
Sindhiya thenai serthu vachen
Sengulathil paiya vanthaal
Innum konjam kalliyadi

Vella manam...

_________________________________



வெள்ளை மனம் உள்ள மச்சான்
விழியோரம் ஈரம் என்ன
பக்கத்திலே நானிருந்தும்
துக்கத்திலே நீ இருந்தால்
கரைசேரும் காலம் எப்போ
வெள்ளை மனம் உள்ள மச்சான்
விழியோரம் ஈரம் என்ன

கள்ள மனம் முள்ளு தச்சி
கண்ணீரில் மூழ்குதடி
வெட்கத்திலே நான் அழுதேன்
துக்கத்திலே நீ அழுத
கர சேரும் காலம் எப்போ
கள்ள மனம் முள்ளு தச்சி
கண்ணீரில் மூழ்குதடி

செங்கரும்பை நான் மறந்து
வேலி முள்ளை ஏன் கடிச்சேன்
பூவுக்குள்ளும் நாகம் உண்டு
சாமிக்கும் தான் வீடு ரெண்டு
கள்ளையும் பாலா நீ நினைச்சே
முள்ளையும் பூவா நீ முடிச்சே
போனதெல்லாம் போகட்டும்ங்க
யாருமிங்கே ராமனில்லே

வெள்ளை மனம் உள்ள மச்சான்
விளையாடி ஓஞ்சி வந்தான்
பக்கத்திலே நீ இருந்தா
சொர்க்கத்திலே நான் மிதப்பேன்
என்னாளும் சேர்ந்திருப்பேன்
வெள்ளை மனம் உள்ள மச்சான்
விளையாடி ஓஞ்சி வந்தான்

கூடுவிட்டு போனகிளி
ஜோடி கிட்டே சேர்ந்ததம்மா
ஜோடி வந்து சேர்ந்த கிளி
கோடி சுகம் காணுதம்மா
சிப்பிய போல நானிருந்து
சிந்திய தேனை சேர்த்து வச்சேன்
செங்குளத்தில் பைய வந்தால்
இன்னும் கொஞ்சம் கல்லையடி

வெள்ளை மனம் உள்ள மச்சான்
விளையாடி ஓஞ்சி வந்தான்
பக்கத்திலே நீ இருந்தா
சொர்க்கத்திலே நான் மிதப்பேன்
என்னாளும் சேர்ந்திருபேன்
வெள்ளை மனம் உள்ள மச்சான்
விளையாடி ஓஞ்சி வந்தான்

_______________________________________



http://www.youtube.com/v/H2WI6YFzf9w?hl=en_US&fs=1

Saturday, March 13, 2010

chittu kuruvi lyrics-chinna veedu tamil song lyrics/சிட்டு குருவி வெட்க படுது



Movie Name:Chinna Veedu
Song Name: Chittu kuruvi
Singers : S.P.Balasubramanium,S.Janaki.
Music Director: IlaiyaRja
Year of release:1985
 
_______________________________________
Lyrics:
 
Pallavi:

Chittu kuruvi vetka paduthu
Pettai kuruvi katru tharudhu
Thottu pazhaga pazhaga sorgam varudhu
Katti thazhuva thazhuva kattil suduthu
Andha purame varame tharume
Muthirai othadam ittadhum nithirai varume
 
Chittu kuruvi vetka paduthu
pettai kuruvi katru tharudhu
thottu pazhaga pazhaga sorgam vardhu
katti thazhuva thazhuva kattil suduthu
andha puramE varamE tharumE
muthirai othadam itadhum nithirai varumE
Chittu kuruvi vetka paduthu
pettai kuruvi katru tharudhu
 
Charanam 1

Thathai thatthi thavazhum
ThoLai thottu thazhuvum
Methai utham nigazhum
Nitham indha tharunam
Inbam kotti tharanum
Endrum saranam saranam
Indha kattil kili dhan kattu padume
Vittu tharume ada daa
Macha kuruvi mutham tharudhe
Uchandhalayil pitham varudhe
Muthachuvadu sindhum udhadu
Sutrupayanam engum varume
Pattuchiragu paravai paruva sumayai perume

Chittu kuruvi vetka paduthu
Pettai kuruvi katru tharudhu
Thottu pazhaga pazhaga sorgam vardhu
Katti thazhuva thazhuva kattil suduthu
Andha purame varame tharume
Muthirai othadam ittadhum nithirai varume
 
Chittu kuruvi vetka paduthu
Pettai kuruvi katru tharudhu
 
Charanam 2

Nitham echil iravu inbam mattum varavu
Moththam mutha selavu
Matthu thattum azagu nitham kattum pozhudhu
Kitta thottu pazhagu
Ahaa kalla kaniye allachugame
Vetka paravai vittu tharumo
Mannan magizhum theppa kulamum
Cheppu kudamum ivale
Angam muzhudhum thanga pudhayal
Methai kadalil muthu kuliyal
Pattichiragu paravai paruva sumayai perume

Chittu kuruvi vetka paduthu
Pettai kuruvi katru tharudhu
Thottu pazhaga pazhaga sorgam vardhu
Katti thazhuva thazhuva kattil suduthu
Andha purame varame tharume
Muthirai othadam itadhum nithirai varume
 
Chittu kuruvi vetka paduthu
Pettai kuruvi katru tharudhu
Thottu pazhaga pazhaga sorgam vardhu
Katti thazhuva thazhuva kattil suduthu
Andha puramE varame tharume
Muthirai othadam itadhum nithirai varume
 
Chittu kuruvi vetka paduthu
Pettai kuruvi katru tharudhu

__________________________________________

தரதத்தத்த தரதத்தத்த தத்த தரதத்தரததரதத்தா
தரதத்தத்த தரதத்தத்த தத்த தரதத்தரததரதத்தா
தரதத்தரதத்த தரதத்தரதத்த தரத தரத தரத தரதா

சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத்தருது
தொட்டுப்பழக பழக சொர்க்கம் வருது
கட்டித்தழுவ தழுவ கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத்தருது
தொட்டுப்பழக பழக சொர்க்கம் வருது
கட்டித்தழுவ தழுவ கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே
சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத்தருது

தத்தை தத்தித்தவழும் தோளை தொத்தித்தழுவும்
மெத்தை யுத்தம் நிகழும்...ம்ம்ம்
நித்தம் இந்தத்தருணம் இன்பம் கொட்டித்தரணும்
என்றும் சரணம் சரணம்
இந்த கட்டில் கிளிதான் கட்டுப்படுமே
விட்டுத் தருமே அடடா
மச்சக்குருவி முத்தம் தருதே
உச்சந்தலையில் பித்தம் வருதே
முத்தச்சுவடு சிந்தும் உதடு
சுற்றுப்பயணம் எங்கும் வருமே
பட்டுச்சிறகு பறவை பருவச்சுமையை பெறுமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத்தருது
தொட்டுப்பழக பழக சொர்க்கம் வருது
கட்டித்தழுவ தழுவ கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே
சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத்தருது

நித்தம் எச்சில் இரவு இன்பம் மட்டும் வரவு
நித்தம் முத்தச் செலவு
மொட்டுக்கட்டும் அழகு பட்டுக்கட்டும் பொழுது
கிட்டத் தொட்டுப்பழகு
ஆஹா கள்ளக்கனியே அள்ளச்சுகமே
வெட்கப்பறவை விட்டுத்தருமோ
மன்னன் மகிழும் தெப்பக்குளமும்
செப்புக்குடமும் இவளே
அங்கம் முழுதும் தங்கப்புதையல்
மெத்தைக்கடலில் முத்துக்குளியல்
பட்டுச்சிறகு பறவை பருவச்சுமையை பெறுமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத்தருது
தொட்டுப்பழக பழக சொர்க்கம் வருது
கட்டித்தழுவ தழுவ கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத்தருது
தொட்டுப்பழக பழக சொர்க்கம் வருது
கட்டித்தழுவ தழுவ கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது
சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத்தருது
பெட்டைக்குருவி கற்றுத்தருது
தத்தத்தரதா தத்தத்தரதா
தத்தத்தரதா தத்தத்தரதா
தத்தத்தரதா தத்தத்தரதா
 
__________________________________________


http://www.youtube.com/watch?v=q1Dg-qcOUU8

Sunday, February 14, 2010

Lyrics of Kavithai Arangerum Neram from the movie Antha 7 Naatkal /கவிதை அரங்கேறும் நேரம்

Movie Name:Antha 7 natkal
Song Name:Kavithai arangerum neram
Siingers:Jeyachandhiran,S.Janaki
Music Director:M.S.Viswanathan
_______________________________


sa sa ga ni sa pa ni sa sa
sa sa sa ma ga ni sa pa ni sa sa
ni sa sa pa pa pa pa pa pa dha ma ma
ma ma ga ma ga ga ma ma ni dha ga ri sa ni

Saptha swara dhevi unaroo
Ini ennil vara dhaanam aruloo
Nee azhagil mama naavil vaazhoo
En kazhivil oli dheepam etoo

Kavithai arangerum neram
Malar kanaigal parimaarum dhegam
Ini naalum kalyaana raagam
Indha ninaivu sangeetham aagum
Kavithai arangerum neram
Malar kanaigal parimaarum dhegam

Paarvai un paadham thedi
Varum paavai en aasai kodi
Paarvai un paadham thedi
Varum paavai en aasai kodi
Ini kaaman pallaakkil yeri
Naam kalappom ullaasa ooril

Un angam thamizhodu sondham
Adhu endrum thigattaadha sandham

Kavithai arangerum neram
Malar kanaigal parimaarum dhegam...

Kaigal pon meni kalandhu
Malar poigai kondaadum virundhu
Ini sorgam verondru edharkku
Endha sugamum eedillai idharku
Manam gangai nadhiyaana uravai
Ini enge imai moodum ilamai

Kavithai arangerum neram
Malar kanaigal parimaarum dhegam...

Neeril nindraadumbodhum
Sudum neruppaay en dhegam aagum
Adhu neril nee vandhaal paayum
Indha nilamai eppodhu maarum

En ilamai mazhai megam aanaal
Un idhayam kulir vaadai kaanum

Kavithai arangerum neram
Malar kanaigal parimaarum dhegam

Ini naalum kalyaana raagam
Indha ninaivu sangeetham aagum
Kavithai arangerum neram
Malar kanaigal parimaarum dhegam...

_____________________________________
சப்த ஸ்வரதேவி உணரு
இனி என்னில் வர தானமருளு
நீ அழகில் மமமாவில் வாழும்
என் கருவில் ஒளி தீபமேற்று
சப்த ஸ்வரதேவி உணரு

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்
கவிதை அறங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

பார்வை உன் பாதம் தேடி
வரும் பாவை என் ஆசை கோடி
இனி காமன் பல்லாக்கில் ஏறி
நாம் கலப்போம் உல்லாச ஊரில்
உன் அங்கம் தமிழோடு சொந்தம்
அது என்றும் திகட்டாத சந்தம்

(கவிதை அரங்கேறும்)


கைகள் பொன்மேனி கலந்து
மலர்ப்பொய்கை கொண்டாடும் விருந்து
இனி சொர்க்கம் வேறொன்று எதற்கு
எந்த சுகமும் ஈடில்லை இதற்கு
மனம் கங்கை நதியான உறவை
இனி எங்கே இமை மூடும் நிலவை


(கவிதை அரங்கேறும்)


நீரில் நின்றாடும் போதும்
சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்
அது நேரில் நீ வந்த மாயம்
இந்த நிலைமை எப்போது மாறும்
என் இளமை மழை மேகமானால்
உன் இதயம் குளிர் வாடை காணும்

(கவிதை அரங்கேறும்)

_____________________________________________

http://www.youtube.com/watch?v=2l7ih8GUvzY