Tamil Songs Lyrics, Tamil Lyrics In Tamil, Latest Tamil Songs,தமிழ் பாடல் வரிகள்: Lyrics of Ponaal Pogattum Poda from the movie Paalum Pazhamum/ போனால் போகட்டும் போடா

Wednesday, February 3, 2010

Lyrics of Ponaal Pogattum Poda from the movie Paalum Pazhamum/ போனால் போகட்டும் போடா

Movie Name:Paalum pazhamum
Song Name:Ponaal pogattum poda
Singers:T.M.Soundhara rajan
Music Director:.M.S.Viswanathan
________________________________


poanaal poagattum poadaa - indha
bhoomiyil nilaiyaay vaazhndhavar yaaradaa?

(poanaal)

vandhadhu theriyum poavadhu engae vaasal namakkae
theriyaadhu
vandhavarellaam thangi vittal indha mannil namakkae
idamaedhu
vaazhkkai enbadhu viyaabaaram - adhil
jananam enbadhu varavaagum - varum
maranam enbadhu selavaagum
poanaal poagattum poadaa...

(poanaal)

iraval thandhavan kaetkinraan adhai illaiyenraal avan
viduvaanaa?
uravaich cholli azhuvadhanaalae uyirai meendum
tharuvaanaa?
kookkuralaalae kidaikkaadhu - idhu
koartukkup poanaal jeyikkaadhu - andhak
koattaiyil nuzhaindhaal thirumbaadhu
poanaal poagattum poadaa...

(poanaal)

elumbukkum sadhaikkum maruththuvam kandaen idharkoru
marundhaik kandaenaa?
irundhaal avalaith thannandhaniyae eriyum neruppil
viduvaenaa?
namakkum maele oruvanadaa - avan
naalum therindha thalaivanadaa - dhinam
naadagam aadum kalainjanadaa
poanaal poagattum poadaa...

(poanaal) 



_____________________________________________-


பாடல்:போனால் போகட்டும் போடா
குரல்:டி எம் சௌந்தரராஜன்
வரிகள்:கண்ணதாசன்

போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?

(போனால்)

வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டல் இந்த மண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...

(போனால்)

இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...

(போனால்)

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா...

(போனால்)

___________________________________________________




http://www.youtube.com/watch?v=Pkywv_mRuTI

No comments:

Post a Comment